இந்தோனேசிய மொழியிலிருக்கும் சில இந்திய வார்த்தைகள்
என் நண்பன் உதயமாறன் எனக்கு கிடைத்த தகவல் களஞ்சியம் . திரு. குமரிமைந்தன் எழுத்துக்கள் பற்றியும், முக நூலில் திரு. ஒரிசா பாலு அவர்கள் பற்றியும் அறிமுகப்படுத்தியதின் விளைவு ......நம் மொழியின் சிறப்புக்களை அறிந்துப் பொங்கிவிட்டேன். நாமும் தேடித் பார்க்கலாமே என்று இந்தோனேசிய மொழியிலிருக்கும் இந்திய மொழி வார்த்தைகள் சிலவற்றை அகராதியிலிருந்து தேடி எடுத்து இங்கே பதிவிட்டிருக்கிறேன். உலகின் எல்லா திசைகளிலும் தமிழர் மொழி பேசப்பட்டது என்று இவ்விருவர் எழுத்துக்கள் உரைக்கின்றன. சமீபத்தில் ஒரு வலைப்பூக் கட்டுரையில் ஜி, ஸ போன்ற வடமொழி எழுத்துக்கள் கூடத் தமிழிலிருந்தே வந்தவை என்றும் அவற்றை வடமொழி பேசுவோரும், பார்ப்பனரும் (அவர்களும் தமிழர் தானே?) உபயோகப்படுத்தியதால் தமிழருக்கு வேண்டாத பிள்ளையாயிற்று என்றும் படித்தேன்...
இந்த வார்த்தைகளுக்கு எனக்குத் தெரிந்த தமிழில் பொருளும் தந்துள்ளேன். தனித் தமிழ் வார்த்தைகளோடுப் பிற (இந்திய) மொழிக் கலப்பும் கொண்டவை. பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்கவும். இந்தோனேசிய மொழியில் அடிப்படை மொழியறிவு மட்டுமே எனக்குண்டு. பேசும் போதும், மொழி கற்க வேண்டி நேரம் கிடைத்த போது மொழி அகராதியில் கிடைத்த வார்த்தைகள் கீழ்வருமாறு....
குறிப்பு: பாஹசா இந்தோனேசியாவின் வரி வடிவம்(எழுத்துக்கள்) ஆங்கிலம் என்பதால் கற்பது சுலபமே. உச்சரிப்பு முறை மாறும்
A - அ, ஆ
E - எ
I - இ, ஈ
T - "ட" என்று உச்சரித்தல் கூடாது ." த" என்றே உச்சரிக்க வேண்டும்
வார்த்தை உச்சரிப்பு பொருள்
Acara அச்சரா விழா
Almari அல்மாரி
Antara அந்தரா இடையில்
Asli அஸ்லி உண்மையில்
Atma ஆத்மா
Ayah அயா தந்தை
Badam பாதாம் பாதாம் பருப்பு
Baki பாக்கி நினைவுபடுத்துதல்
Baskara பாஸ்கரா சூரியன்
Bahasa பாஹசா மொழி பாஷை
Bhumi பூமி நிலம் / மனை பிரசஸ்ட்டி
Ma மா அன்னை
Buwana புவனா பூமி
Bujangga புஜங்கா கவிஞன்
Chandra சந்ட்ரா சந்திரன்/நிலவு
Cerita செரிதா கதை
Cerna செர்னா ஜீரணம்
Citra சித்ரா ஓவியம்
Dharmawan தர்மவான்
Dunia டுனியா உலகம்
Dupa டூபா தூபம், ஊதுபத்திப் புகை
Durjana டுர்ஜனா துஷ்ட்ட கெட்ட
Dusta டுஷ்டா பொய்மை
dwi டுவி இரண்டு
eka எகா ஒன்று
ekawarna ஏகவர்ணா ஓர் நிறமி
Gaja கஜா யானை
Gita கீதா பாடல்
Garuda கருடா கருடன் / கழுகு
Gunawan குணவான்
Harimau ஹரிமாவு புலி
Idi இடி சுவையற்ற
Jagat ஜகத் உலகம்
Jawab ஜவாப் பொறுப்பு
Jaya ஜயா வெற்றி
Jiwa ஜீவா ஜீவன் / உயிர்
Kadalai கடலை சோயா (மற்றும் சில வகைப் பருப்புக்களுகும் கடலை என்றே குறிப்பிடுவர் )
kadir கடிர் சர்வ வல்லமையுள்ள
karma கர்மா முன்வினை
karunia காருனியா பரிசு
karya கார்யா வேலை
khatam கதம் இறுதி
Karyawan கார்யவான் வேலைக்காரன்
khayal கயல் கற்பனை
kolam கோலம் குளம்
kondai கொண்டை தலைக்கொண்டை
kota கோத்தா கோட்டை / நகரம்
kriya க்ரியா திறன் (கிரியை அல்ல அந்தக் சொல்லுக்குத் திறன் என்ற பொருள் தான்)
kuil குயில் கோயில்
Kursi குர்சி நாற்காலி
kuli குலி வேலையாள்
kumba கும்பா ஆற்றுப்படுகை
laksana லக்சனா பண்பு
laksaman லக்சமன் தளபதி நிர்வாகி
Maaf மாப் மன்னிப்பு
Mabuk மபு(க்) போதை
Madrusah மட்ருசா பள்ளிக்கூடம்
Madu மடு(மது) தேன் (மதுவுண்ட மயக்கம் கொண்டத் தேனீ...அதற்குத்தான் ஂதேனுக்கு மதுவென்று வைத்தார் போலும் )
Maha மகா பெரிய
Mahadewa மகாதேவா
Mahadewi மகாதேவி
Maharaja மகாராஜா
Maharani மகாராணி
Mahamenteri மகாகுரு
Mahesa மகேசா
Mami மாமி விபச்சாரத் தரகி
Mandala மண்டலா பகுதி
Mangga மாங்கா மாங்காய்
Mangu மங்கு குழப்பம் (இதுக்குத் தான் நம்ம மக்கள் மங்குனின்னு சொல்றானுவளோ?)
Manusia மனுசியா மனிதர்கள்
Mara மாறா கோபம்
Mata மாதா கண்
matahari மாதாஹரி சூரியன்
Maya மாயா மாயை
Mega மேஹா மேகம்
Meja மேஜா மேஜை
Mina மீனா மீன ராசி
Mirah மீரா மாணிக்கம்
Moka மோகா மோக்ஷம்
Nadi நாடி நாடித்துடிப்பு
nakal நக்கல் குறும்பு
nama நாமா பெயர்
Negara நெகரா மாநிலம்
Negarawan நெகரவான் மாநிலங்கள்
Nila நிலா நீல வர்ணம்
Nilai நிலை விலை/ மதிப்பு / தரம்
Nirmala நிர்மலா பரிசுத்தமான
Nirmana நிர்மணா முறை
Nirwana நிர்வாணா நிர்வாணம்
Nirwarna நிர்வர்ணா நிறமற்ற
Niscaya நிஸ்சயா நிச்சயம்
Nista நிஸ்டா அவமானம்
Nyana ந்யானா கருது / ஞானம்
nyawa ந்யாவா கொள்கை
Padma பட்மா தாமரை
Paksana பக்சனா வடக்கு
Panca பஞ்ச்சா ஐந்து
pancaindera பஞ்சயிந்தெரா ஐம்புலன்கள்
pena பேனா
Pertiwi பெர்திவி பூமி
Prasati பிரசஸ்தி புதுமனைப் புகு விழா
Pria ப்ரியா ஆண்
Puasa புவாசா உபவாசம்/ விரதம்
Puja, Puji பூஜா பூஜை
Pura புரா கோயில்
Puri புரி அரண்மனை
Puspita புஸ்பிதா மலர்
Pustaka புஸ்தகா புத்தகம்
Pustakawan புஸ்தகவான் நூலகர்
Ragam ராகம் இசை
Raja ராஜா
Rana
Rani ராணி
Rasa ரசா சுவை
Raya ராயா பெரிய
Reka ரேகா கண்டுபிடிப்பு
Sabda சப்டா ஒலி
Sakti சக்தி
Sapta சப்தா ஏழு
Satwa சத்வா மிருகம்
Saudara சௌடாரா சகோதரன்
Saudari சௌடாரி சகோதரி
Semburna
Setiyawan செத்தியவான் சத்தியவான்
Sewaka சேவகா அஞ்சலி
Suami சுவாமி கணவன்
sunggai
Swasta தனியார்
Tirta தீர்த்தா தண்ணீர்
Tri த்ரி மூன்று
Upacara உபச்சாரா விழா
Wahana வாஹனா வாகனம்
Wanita வனிதா பெண்
Warna வர்ணா நிறம்
Warta வார்த்தா செய்தி
Wartawan வார்த்தவான் பத்திரிகையாளர் / செய்தியாளர்
Wibawa விபவா சக்தி
Wihara விஹாரா மடம்
Wilayah விலயா பகுதி
Wisuda விசுதா விழா
Wijaya விஜயா வெற்றி
Yogiya யோகியா யோக்கியம் / முறைமையான
Yudha யுத்தா யுத்தம் / போர்
இன்னும் சில நூறு வார்த்தைகள் கலந்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன். ஆனால் எனக்கு மொழிச் சரளம் இலாத காரணத்தால் இவற்றுடன் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சுலேகா, சத்தியவான், தர்மவான், குணவான், நிர்வாணா, ஜெயா போன்றப் பெயர்கள் இங்கு சாதாரணம். இந்திய வார்த்தைகள் இந்த நாட்டில் மெல்ல மறைந்திடும் என்பது என் கருத்து. காரணம்............. 60% மக்கள் பேசும் ஜாவா மொழியையே தேசிய மொழியாக்காமல் வேறோர் மொழியை தேசிய மொழியகாகக் கொண்ட நாட்டில் வேறென்ன எதிர்பார்க்க ?
No comments:
Post a Comment