Friday, 18 September 2015



PACM அன்பு நண்பர்கள்  Whatsapp Group First Year Anniversay 13th September 2015


06:41, 13/09/2015] Biju Dhyaneish: Good morning everyone!


 [06:51, 13/09/2015] Biju Dhyaneish: Today is a special day. A day to celebrate (at least in our minds). A year ago on this date is when Suren started this group and invited each and every one of the members  personally to join the group. I personally know the lengths he went to add members to this group. His efforts are really really appreciated. Well done Suren and thanks a million for bring us all together. 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼


[07:00, 13/09/2015] jeeva mkraja: சங்கத்து முதலாம் ஆண்டு நிறைவு....

அட்மின் சுரேனுக்கு நன்றிகள். நண்பன் ரமேஷ், கோ அட்மின் உதயமாறன் மற்றும் என்னை உங்களுள் இணைத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

இணைந்தே இருப்போம்.💐💐


 [07:36, 13/09/2015] C Ramesh. PACM: Ellathukum 🙏🙏🙏surenuku👑👑👑💐💐💐🎁🎁🎁🎁🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎈🎈🎈🎤🎤🎤🎤🎼🎼🎼🎼🎶🎶🎶🎻🎻🎻🎺🎺🎺🍻🍻🍻🍺🍺🍺🍺🍹🍹🍹🍷🍷🍷🎂🎂🎂🍧🍧🍧🍦🍦🍦


 [08:09, 13/09/2015] Ponnambalam: காலை வணக்கம் நண்பர்களே.பல தேசங்களில் வாழும் நண்பர்களை தேடி பிடித்து இணைத்தது என்பது சாதாரணமான காரியம் இல்லை.

வாழ்த்துக்கள் சுரேன்.


 Uthayamaran: Good Morning Guys... சங்கத்தின் முதலாம் ஆண்டு வாழ்த்துகள். Suren hats off to you for your efforts.... great man..


  PremChand: Wow great day to celebrate. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.  நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. Tnx suren


  Suren PACM: அனைவருமே மனமுவந்து சேர்ந்து இருப்பதிலேதான் இது இன்றையபொழுதும் சாத்தியமானது..நன்றி அனைவருக்கும். இன்னிக்கு ஒரு இரண்டு பேரயாச்சும் இத சொல்லியே சேத்துறனும். ஓடி போன லிஸ்ட்ல யார் இருக்கா ?!


  Suren PACM: பாபு சரவணன் ,பாண்டியராஜன்  வேற ??


Ponnambalam: 5/6 ஆண்டுகளாக ஒன்றாக படித்தோம் .
வாழ்வை நாடி பிரிந்து சென்றோம்.
எல்லார் மனதிலும் அந்த அன்புமட்டும் அப்படியே...
நாற்பதுகளில் இருபதை கொண்டு வர இயலுமா?

சாத்தியம் என காட்டினான் அட்மின்.
இணைத்தான் அனைவரையும்.
எத்தனை பேரை சந்தித்து இருப்பான். எத்தனை போரோடுதொலைபேசி பேச்சு,
இதோ ஓராண்டு நிறைவடைந்தது.

இந்த ஓராண்டுக்குள்ளேயே நமக்கு எத்தனை பசுமை நிறைந்த நினைவுகள்....
நமக்குள் பேச ஆயிரம் விஷயம் இருந்ததாலேயே ஆயிரம் மெசேஜை அசால்டாக தொட்டோம்.
அரசியல் தொடங்கி ஆன்மீகம் இயற்கை நலன்
ஈகையின் முக்கியத்துவம் உடல்நலம் பேணுதல்
என தொடாத துறையே இல்லை.
ஏவுகணை ஏவுவது பற்றி பேச்சு வந்தாலும் சரக்கு நம்பாளுக கிட்ட இருக்கு.
அதனாலேயே இந்த க்ரூப் போரடிக்காம போச்சு.
முக்கியமான விஷயம் ஈகோவை மறந்த நண்பர்கள்.

இப்படி கிடைப்பது மிக மிக கடினம்.

ஆனது ஓராண்டு
இணைந்தே இருப்போம் இன்னும் நூராண்டு.

மீண்டும் வாழ்த்துக்கள் சுரேனுக்கு.


 Suren PACM: அருமை pons.


 [08:35, 13/09/2015] Ponnambalam: நன்றி சுரேன்.


Parama‬: Yes I agree with Biju.. Suren did work diligently to reunite us together.. Thanks Suren !


 R Ganeshram PACM: Congrats and wishes to all who tirelessly supported this group and special wishes to Suren!


 Ponnambalam: கோ அட்மினுக்கு ஸ்பெஷல் வாழ்த்தும்
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்யா.இவன் "ரொம்ம்ப்ப நல்லவன்" விருது....


 C Ramesh. PACM: Uthayamaran, Biju,Lagu,Sugu,Ponna,Siva,Jeeva,Babu.Ethil evargal panku romba athikam.


 Uthayamaran: 😀😀😀


 ] Ponnambalam: விருது வாங்கியவர்கள் சம்பிரதாயமா இரண்டு வார்த்தை பேசணும் மச்சி.விஜய் டிவி பார்க்கறது இல்லையா நீ


 Uthayamaran: நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு. இன்னைக்காவது அடிக்காம இருங்கய்யா


 C Ramesh. PACM: 😄😄😄😄😄


  Ponnambalam: இந்த விருதை.......டெடிகேட் பண்றேன்.
இவரால தான் இது சாத்தியமாச்சு
a Sugu
b Siva
c Lagu
d Jeeva


  C Ramesh. PACM: Poda eppady group pa otta


 Uthayamaran: 😀😀


Ganesh PACM: 👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏பொண்ணா.


 Ponnambalam: 162824.Thnks Ganesh


  Uthayamaran: Logic pls


  C Ramesh. PACM: Lo+gic=Logic


  Uthayamaran: 😀
  Ponnambalam: 8*2 2*1 8 *1 (add all the three values and subtract it from face value of tens place ie 2


  Uthayamaran: 5*3and 3*2 and 5*2


  Ponnambalam: 👍You hv got it


  Uthayamaran: Ponna if we add all the three digits it ll be 11 only na


  Ponnambalam: No add the the answers ie 16+2+8


  Uthayamaran: Okay


  Ponnambalam: 👍👍👍


  Babu PACM: Thanks to every one ... adaei sleeper cells innaikaavathu mulitchi oru hai sollitu pongada
  Suren PACM: 😄


  Ponnambalam: 😂


  Uthayamaran: 😂😂


  Sivakumar PACM: Group thodangiya mutual aandu niraivadantha sandhoshathil admingal senthu sanga uruppinargalukku gold chain parisalippar enbadhai magilchiyudan terivithu kolgiren👏👏👏👏😤😤😤
  Sivakumar PACM: ***Muthal


  Ponnambalam: 👏👏😂


 Sivakumar PACM: Ellarum varisayil vaangappu,anaivarukkum undu


 C Ramesh. PACM: 😄😄😄😄👌🏻👌🏻👌🏻👌


 Sivakumar PACM: Tn govt la ilavasam vaangi vaangi palakka pattutom,yemaathirathenga admingala😢😢😢


C Ramesh. PACM: Gdpna


  Uthayamaran: Gross Domestic Product. The total market value of all final goods and services produced in a country in a given year, equal to total consumer, investment and governmentspending, plus the value of exports, minus the value of imports. 


 Suren PACM: சிவா, உன்னய அறியாமயே mutual nu வந்திருச்சுல்ல


 Sivakumar PACM: Suren,dubaila irunthu nee anupina gold container onna sangathukku dedicate pannu da😜😜😜


 Uthayamaran: 😂😂😂


 C Ramesh. PACM: 😄😄😄


  Sivakumar PACM: Vere entha groupum aarambicha sila naalil,ivlo message adichadhilla,2 get together organise pannathilla,and sigaram nu oru branch aarambichu social responsibility prove pannathilla,km nu innoru branch aarambichu sex kalvi research Ku contribute pannathilla.ippadiye innum sollikitte pogalam ya namma group pathi👏👏👏👏👏. Group aarambicha pudhisila suren aal pudikka evlo kashtapattangirathai naamellam maranthira koodathu.avan annai Teresa maathiri,evlo kevala paduthinalum kaari thuppinaalum ovvoruthan kaalilayum vilunthu group Ku aal sethan ya.silarukku sarakkellam kooda oothi kuduthadhaga vadhanthi.😆😆😆😆.Whatsapp na ennena teriyaatha ennayum groupla Sera vachadhu avan dhan ya.🙏🙏🙏. Gold chain venumgiravanellam admina pugalnthu koovunga da😝😝😝😝.  Groupa active a vaichirukkirathukkaga uthayan vaangina adi konjamaa nanjamaa?? Evlo  velai paathiruppaan avan.uthayan senja thyagangalai ellam naam marakka koodathu


 Uthayamaran: 😂😂👍🏼👍


 Sivakumar PACM: Pons romba nerama type panraan.over feelingsaa??


Ponnambalam: =ஊரைக்காக்க உண்டாண சங்கம் ராகத்தில் படிக்கவும்)

நட்பை போற்ற உருவான சங்கம்
நாட்டைக் காக்க உருவான சங்கம்
இதுங்க

இதுபோல சங்கம் இல்லை எங்கும்,,,,,

PACM நண்பர்கள் சங்கம்
இது பாசத்தாலே கட்டப்பட்ட சங்கம்....


Uthayamaran: 😀😀


 Sivakumar PACM: Kaippulla uthayan(evlo adichalum thaanguravan) vaazhga


 Ponnambalam: அய்யா பாட்டாவே பாடிட்டேன்.


 Sivakumar PACM: Pons kalakkal pa👏👏👏👌👌👌👌


  Uthayamaran: 😀போதும்யா. இந்த Sleeper cell களை கொஞ்சம் உலுக்கி விடு


 Sivakumar PACM: Uthaya,thoonguravana eluppalam thoongura mathiri nadikkiravana onnum seiya mudiyathu da


Uthayamaran: 😂😂😀😀


 Ponnambalam: எதுக்குய்யா சுரேனை கிண்டல் பண்ற


 SugumaranPACM: Good morning Guys!!!!


 Babu PACM: Ennaya weakend entry kodukkan


 Ponnambalam: 😂


 SugumaranPACM: 😂😂


 Sivakumar PACM: Thooka kalakkathila teriyama msg anuppittan sugu


SugumaranPACM: சங்கத்துல அட்டெண்டென்ஸ் போடலைனா ஒரு மாதிரி இருக்குப்பா?


 Sivakumar PACM: Gold chain venumunna neeyum admina pugalnthu kooviru sugu


SugumaranPACM: அப்படியா?


 Sivakumar PACM: Ada aama pa aama


SugumaranPACM: எத்தனை சவரன்?


 Sivakumar PACM: Enakku confirmed pa


Babu PACM: Admin vaazhga...admin vaazhga


 Sivakumar PACM: Adhu nee koovuratha poruthadhu sugu


Babu PACM: Enda biriyaanukkum quarterkkum talivar vazhgannu gosham pottavane.. ethana savarannu sonnathan koovuvuyo.. nee muzhunera pakutharivazhanaaga maaritiyakkum. Ellathukkum kelvi ketka


 SugumaranPACM: ஆமாம் பாபு.. எவ்ளோ கூவனும்னு தெரியனும்ல..


 SugumaranPACM: சும்மா வாழ்க கோஷத்துக்கு எல்லாம் காசு கொடுக்க அவன் என்ன அம்மாவா?


Babu PACM: Naangellam koovala.. kootathoda govinda poduya


SugumaranPACM: 😂😂


 Ponnambalam: செய்தி தினமலரா??


 Sivakumar PACM: Ungalukku pudikkatha seithi na dinamalar dhan


 Uthayamaran: 😀😀😀


Ponnambalam: ஆங்......செல்லாது செல்லாது


 Uthayamaran: 😂😂😂


 Sivakumar PACM: uthayan inniku ponga maatangira dhairiyathula dhan vambukku ilukkuren. Ponguna , veetila avan thangamani veppaila adippanga 😂😂😂😂. madhiyam saapatila, paayasathuku padhil poison dhan vanthu vilum uthaya


 Uthayamaran: 😂😂😂



Sanjai PACM: Happy first anniversary of our group.
எல்லா புகழும் சுரேனுக்கே


 Ganesh PACM: 👏👏👏👏👏 Sanjay


 Sivakumar PACM: Sanjai ku oru gold chain parcelll


  Sanjai PACM: Gold chain சலிக்காமல் அடிவாங்கும் உதயனுக்கே.


Guru Raj tv: Congrats & wishes 2 all our group members.


 Sivakumar PACM: Sanjai, adi vaangurathum groupa activea vachirukka paadu padurathum co-admin uthayanoda kadamai. Group thodangi one year aanadhala, Main admin suren, group members ku ellam thanga changili parisu kudupparu. Adhanala dhan avara pugalnthu ellarum koovittu irukkom


C Ramesh. PACM: Rendu vatti koovina rendu chain kedaikuma😜😜


Sivakumar PACM: Ramesu, 1 ke innum badhil varala, nee attaya kalachirathe raasa


 Uthayamaran: Aazhi Senthil Nathan
ராம் சரித மானஸ் இந்தியில் எழுதப்பட்டதா? - மோடியின் வரலாற்றுப் புரட்டும் அவதி மொழி படும் அவதியும்
உலக இந்தி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாம் இந்தியை மறந்துவிட்டால், ராம் சரித மானஸை மறந்துவிடுவோம் என்று பேசினார். வரலாறுகளையும் புராணங்களையும் குழப்பிப்போட்டுத் தாக்குவதில் புகழ்பெற்றவரான மோடி இந்த விவகாரத்திலும் மிகப்பெரிய குளறுபடி செய்திருக்கிறார்.
ராம் சரித் மானஸ் என்பது வால்மீகி இராமாயணத்தின் அவதி மொழி வடிவம். தமிழில் கம்ப ராமாயணம் போல, அவதி மொழியில் ராம் சரித் மானஸ். இதை எழுதிய கோசுவாமி துளசிதாசரின் காலம் கிபி 1532–1623. இந்தக் காலத்தில் இந்தி, உருது, இந்துஸ்தானி எதுவுமே உருவாகியிருக்கவில்லை. இதற்கு 1600-1800 காலத்தில்தான் மொகலாயர் ஆட்சியின் கீழ் இன்று நாம் காணும் இந்தி-உருது-இந்துஸ்தான் உருவானது. அது இ்ன்றைய சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியாக உருவானது 1959களுக்குப் பிறகுதான்.
அவதி 1500களிலேயே முக்கியமான வட இந்திய மொழியாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் அவதியும் பிரஜ் பாஷாவும் முக்கிய இலக்கிய மொழிகளாக உருவாகிவிட்டிருந்தன. இதெல்லாம் வரலாற்று பாலபாடங்கள்.
ஆனால் நரேந்திரமோடியோ துளசிதாசரின் ராம் சரித் மானஸ் இந்தியில் எழுதப்பட்டது என்கிறார்.
என்னதான் அவதியை இந்தியி்ன் கிளைமொழி என்று அரசு திட்டமிட்டு அழித்துவந்தாலும்கூட, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதுகூட சுமார் 38 லட்சம் பேர் தங்கள் தாய்மொழி என்று இந்தி கிடையாது, அவதி என்று பதிவு செய்திருக்கிறார்கள். பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் அவதி மொழியில் பேசுவது வடக்கே பிரசித்தம்.
தொழில்நுட்ப ரீதியில் இன்று அவதிக்கு தனி ஐஎஸ்ஓ குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது (ISO 639-3). அவதி மொழியில் விக்கிபீடியா தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன: https://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikipedia_Awadhi#Awadhi_Wikipedia
ஆனால் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை முன்மொழியும் இந்தித்துவவாதிகள் அவதி உள்பட பல்வேறு வட இந்திய மொழிகளை கொல்வதிலேயே ஆர்வம் காட்டிவருகிறார்கள்.


 Ponnambalam: கீழே உள்ள படங்களை பார்த்து தவறை கண்டுபிடிக்கவும்


 Biju Dhyaneish: நீயே சொல்லிடு பொன்ஸ்.
தேற்றம் எல்லாம் நியாபகம் இல்லை...


Ponnambalam: Pythagoras Theorem

The sum of squares of other two sides of a right angled triangle is equal to the square of its hypotonuse.
இந்த படத்தில் குறிப்பிட்ட படி     6^2 + 8^2 = 10^2 = 100        பிதாகரஸ் தியரம் படி 6ம் 8ம் மாறினாலும் விடை ஒன்றே. போதாயனர் சூத்திரமாக இங்கே  சொல்லப்படுவதில் .......6ம் 8ம் இடம் மாறினால் விடை மாறிவிடும்.  பெருமை பேசுவதாக நினைத்து பொய்யான செய்திகளை பதிவிடுகிறார்கள்.


 Uthayamaran: ஆமாம்.


 Biju Dhyaneish: தமிழனா உன்னை நினைச்சு பெருமைப்படுறேன் பொன்ஸ்.. 👏🏼👏🏼👍
 Ponnambalam: Biju 🙏ஏம்பா 


Baskar‬: இந்த  நாடும் நாட்டு  மக்களும்  நாசமா போகட்டும்


 Ponnambalam: பாஸ்கி 😜வாப்பா..........ஏனிந்த கோபம்?


Uthayamaran: 😂😂


 Ponnambalam: அருள்வாக்கு கொடுத்தட்டு உடனே போயிட்டானா


Baskar‬: No i am here ..... Only


 Ponnambalam: Ok. But why this kolaveri?


Baskar ‬: Why we have to importance to modi speech. he cant impose hindi on us. We know who we are.  யாதும் ஊரெ யாவரும்  கேளீர்.


 Ponnambalam: இந்தி எதிர்ப்புக்கா...சரிசரி...அவன் கிடக்கான் சொம்ப ....

எவன் வந்தாலும் தமிழின் பெருமையை குறைக்க முடியாது.


Baskar‬: We accept all people at the same time we will not let others to intervene  in our matters.  . We know all came from monkey. I am monkey and he is also monkey.  . I mean monkey orgin. Udhaya your thoughts


Ponnambalam: சண்டே ஸ்மைலி மட்டும்தான் அவன்.


 Baskar‬: Is it? ........ Ok share your thought ponns


Ponnambalam: ஆமாம். எழில் அவனை மற்ற நாட்களில் மிஸ் பண்றதால. அதுவும் சரிதான்.  இந்தியை அவர் திணிக்க முயல்வது மறைமுகமாக இந்துத்வாவை திணிப்பதற்கே.  எல்லா மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து பாஸ்கி.


Baskar‬: One day everyone has to miss everyone. That is nature.  Dont think i am speaking philosophy but that is  the truth.
Baskar‬: I appreciate


  Ponnambalam: ஒவ்வொருவரின் மொழியும் அவரவர்களுக்கு பெருமை தரக்கூடியதே.

தாய்மொழி......
தாய்க்கு ஈடானது என்பதாலேயே அப்பெயர்.
யார்தான் தனது தாயை குறைத்து மதிப்பிடுவர் (அ) அதற்கு அனுமதிப்பர்.


Baskar‬: You are  right


 Babu PACM: "All  ethics must be arrived at in isolation of religious beliefs"... eppadi intha dialouge censorkitta thappuchi.. ithuve unethicalla irrukke


 C Ramesh. PACM: Payum puli padamla jil jil ramamani varada

  Uthayamaran: ண் எனும் பகடைக்காய்: இற்று விழும் வேர்கள்

Updated: September 13, 2015 12:25 IST | பா.ஜீவசுந்தரி

   

கடந்த வாரம் என் வீட்டு எதிரில் இருக்கும் மரத்தில் பறவைகளை வேடிக்கை பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தேன். தற்செயலாகத் தெருவில் போவோர் வருவோரின் மீதும் பார்வை பதிந்தது. தினமும் எத்தனை விதமான மனிதர்கள் ஆண்களும் பெண்களுமாக நம்மைக் கடந்து செல்கிறார்கள். அதில் சில முகங்கள் மட்டும் மனதில் பதிந்து போகும்.

வயதான பெண்மணி ஒருவர் தெருவில் நின்றபடியே அலைபாய்ந்தவாறு இருந்தார். வழிப்போக்கர் அல்ல. அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கேயோ பக்கத்தில்தான் வீடு இருக்க வேண்டும். வேகாத வெயிலில் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு, அந்தப் பைகளைக் கைகளிலும் இடுப்பிலுமாக சுமந்துகொண்டு செல்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அறிமுகமோ, நேரடிப் பேச்சோ கிடையாது. அவரும் என்னைப் பல முறை பார்த்தபடியே போவார். இப்போது ஏன் அவர் தெருவில் நின்றபடி அல்லாடிக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை. அப்போதுதான் அவர் என்னிடம் எதையோ எதிர்பார்த்து நிற்கிறார் என்பதும் கேட்பதற்குத் தயங்குகிறார் என்பதும் புரிந்தது. ‘அம்மா எதுவும் வேண்டுமா?’ என்று நானே பேச்சை ஆரம்பித்தேன்.

அவர் முதலில் கொஞ்சம் தயங்கினார். முகத்தில் சோர்வு தெரிந்தது. ‘‘பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்க’’ என்றேன். கொஞ்சம் அருகில் வந்து மிகவும் தயக்கத்துடன் “கொஞ்சம் காபி கிடைக்குமாம்மா” என்றார். உடனே அவசரமாக காபி தயாரித்து ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். தன் கையில் இருந்த பைக்குள்ளிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்து, “இத அப்படியே இதில் ஊற்றிக் கொடும்மா” என்றார். புரியாமல் அவரைப் பார்த்தேன். ‘இல்ல, பக்கத்துல இருக்கிற பார்க்குல உக்காந்து குடிப்பேன்’ என்றார். நானும் பேசாமல் அப்படியே காபியை ஊற்றிக் கொடுத்தேன். அவர் சில கட்டடங்கள் தள்ளி இருந்த பார்க்குக்குள் சென்றார். நான் வீட்டுக்குள் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்ததும் அந்தப் பூங்காவிலிருந்து அந்தப் பெண் மற்றொரு வயதான பெண்ணுடன் சிரித்துப் பேசியபடியே வெளியே வருவது தெரிந்தது.

இப்போதுதான் அடுக்கடுக்காகக் கேள்விகள் எனக்குள் எழுந்தன. அவரைப் பார்த்தால் வசதி குறைந்தவராகத் தெரியவில்லை. காதில், மூக்கில் தங்க நகைகள் பளபளத்தன. கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகத் தெரிந்தார். தள்ளாடும் வயதானாலும் நடமாட்டம் நன்றாக இருந்தது. அவருக்கு இந்த நிலையை எது ஏற்படுத்தியது? தான் விரும்பியவாறு ஒரு வாய் காபி குடிக்கக்கூட அவருக்கு அவருடைய வீட்டில் இடம் இல்லையா? கையில் காசில்லையா? தன்னைப் பார்க்க வந்த வேறொரு முதிய பெண்ணுக்குத் தன் வீட்டில் ஒரு டம்ளர் காபி கேட்டால்கூடக் கிடைக்காது என்ற நிலையா?

இக்கேள்விகளுக்கு விடை காண்பது இங்கு முக்கியமல்ல. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இன்று அனைத்து முதியோர்களின் நிலை இதுதானோ என்று தோன்றுகிறது. வர்க்க பேதமில்லாமல் அனைத்து முதியோருமே ஏதோ ஒரு விதமான தனிமையில் வாடுகிறார்கள். வசதி இருப்பவர்கள் தங்கக் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அன்றாடங் காய்ச்சிகளாக இருந்து இற்றுப் போனவர்கள் பிச்சைக்காரர்களாக அலைகிறார்கள்.

முன்னேற்றத்தின் தலைமுறை

இன்று முதியோராக இருப்பவர்கள் அல்லது முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவர்கள் 70கள் 80களில் தங்கள் அயராத உழைப்பால் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உருவாக்கிய தலைமுறையினர். சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை முதன்முதலாக உணர்ந்த தலைமுறையினர் இவர்கள்தாம். இவர்கள் உழைப்பால்தான் பிள்ளைகள் படித்து, வேலைக்குப் போய் இன்று சமுதாயத்தில் அவர்களும் மனிதர்களாக உலாவுகிறார்கள்.


 Uthayamaran: ஆனால், இன்று அந்த முதியவர்கள் அனைத்து வீடுகளிலும் வாட்ச் மேன்களாக, பேபி சிட்டர்களாக, வேலைக்காரர்களாக, சமையற்காரர்களாகக் கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆண் – பெண் பேதமில்லாத முதியோர் நிலை இதுவென்றால் பெண்களின் நிலை இன்னும் ஒரு படி கீழே. எப்போதும் இரட்டைத் தாக்குதல்களுக்கு ஆளாகிறவள் பெண் அல்லவா?

குடும்பத்தின் உழைப்பில் பெண்ணின் பங்களிப்பு ஒரு பங்கு அதிகம்தான். ஐந்து வயதிலேயே வீட்டு வேலைகளைப் பழகத் தொடங்கும் சிறுமி, விரைவில் அடுத்தடுத்த தம்பி, தங்கைகளை அவர்கள் கைக்குழந்தைகளாய் இருக்கும்போதிலிருந்தே கவனிக்கும் பொறுப்பையும் ஏற்கிறாள், வீட்டு வேலைகள் பழகுகிறாள். சமைக்கக் கற்றுக்கொள்கிறாள். கல்வியும் கற்கிறாள். வேலைக்குப் போகிறாள். திருமணத்திற்குப் பின் வீட்டின் முழுப் பொறுப்பும் அவள் கைகளில். பிள்ளைகள் பெறுகிறாள். வளர்க்கிறாள். பிள்ளைகளின் மனம் கோணாமல் படிக்கவும், வளரவும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே அல்லாடுகிறாள். நாற்பது வயதுக்கு மேல் உடல் ஒத்துழைக்க மறுக்கத் தொடங்குகிறது. வயோதிகத்தில் இவள் நிலைமை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிய பின் இவள் இரண்டாம் பட்சமாகிறாள். அவர்கள் வேலைக்குப் போன பின் வீட்டைப் பராமரிக்கவும் பேரன் – பேத்திகளை வளர்க்கவும் அவள் தேவைப்படுவதால் கொஞ்சம் கவனம் பெறுகிறாள். உடல் தளர்ந்து, முடங்கிப்போகும்போது அவளே தன் பிள்ளைகளுக்குச் சுமையாகிறாள்.

சுமையாகும் முதுமை

வீட்டுக்கு வீடு இந்த நிலை கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஆனால், இல்லையென்று மறுத்துச் சொல்ல முடியுமா? அப்படி இல்லையென்ற நிலை வர வேண்டும் என்பதுதான் நமது விருப்பம், ஆசை, பேரவா! ஆனால், வீட்டுக்கு வீடு வாசற்படிதானே!

இதன் எல்லை மீறல்கள், வரம்பு மீறல்கள் எப்பக்கத்தில் நிகழ்ந்தாலும் தீர்வு முதியோர் இல்லம் என்பதாகத்தானே மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தை வளர்ப்பும் கல்வியும் நூறு சதவீதம் பெற்றோரைச் சார்ந்தே இருக்கிறது. அரசோ சமுதாயமோ அவர்களுக்கு எதுவும் உதவுவதில்லை. ஆனால், பெற்றோரைக் கசக்கிப் பிழிந்து அவர்களைச் சக்கையாகத் தள்ளுகிறது. அப்படிச் சக்கைகளாக விழுந்தவர்களைத்தான் இரண்டாம் பட்சமாக, மூன்றாம் பட்சமாக, வேண்டா வெருப்பாகக் கருதுகிறோம்!

இதிலும் பால் பாகுபாடு. அள்ளிக் கொடுத்த தந்தைக்கு ஒரு மதிப்பு. ஊட்டி வளர்த்த தாய்க்கு மற்றோர் மதிப்பு. நகரங்களில் போலி கவுரவத்துக்காகவாவது வீட்டில் வைத்துக் காப்பாற்றுவார்கள். கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்குள் வாழும் பெண்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். போதிய சத்துணவு இல்லாமல் கூனல் விழுந்து, அரைகுறை செவி, பார்வைப் புலன்களுடன் கம்பு ஊன்றி வாழ்கிறார்கள். வீட்டுக்கு வெளியே தொழுவம் அல்லது திண்ணைகளில் ஒரு சாக்கு, நெளிந்த அலுமினியத் தட்டு என்பதாகச் சுருங்குகிறது அவர்கள் வாழ்க்கை. அத்தட்டில் எப்போதாவது ஏதாவது ஒரு கவளம் விழுமா என்பதுகூடத் தெரியாது. பல சமயங்களில் தனித்து விடப்படும் அவர்களது மரணம்கூட இரண்டொரு நாள் கழித்து உடல் அழுகும் நாற்றத்தால் அறியப்படுவதும் உண்டு.


 Uthayamaran: இனி கட்டுரைகள் தட்டச்சு செய்ய வேண்டாம் பேசினாலே போதும் ஆவணம் தயார்!
கூகுள் டிரைவ்-ன் புதிய வரவு விரைவில் தமிழிலும்..
-------------------------------------------------------------------------------------------

இணையம் வழியாக ‘டைப்’ செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொள்ள உதவும் 'கூகுள் டாக்ஸ்' சேவையில் ‘வாய்ஸ் டைபிங்’ எனப்படும் குரல் வழி டைப்பிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இனி கூகுள் டாக்சில் 'டைப்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 'டைப்' செய்ய வேண்டிய வாசகங்களை குரல் வழி 'டிக்டேட்' செய்தாலே போதுமானது.
பிரவுசரின் செட்டிங் பகுதிக்குச் சென்று வாய்ஸ் டைப்பிங் அம்சத்தைத் தெரிவு செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதன் பிறகு பேசத் தொடங்கினால் போதும் எழுத்துக்கள் தானாக 'டைப்' ஆகும்.
ஆங்கிலம் உள்ளிட்ட 40 மொழிகளில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இந்திய மொழிகளில் இந்தி மொழி இடம்பெற்றுள்ளது. தமிழையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இது தவிர ஆவணங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களைத் தேடும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment