Wednesday, 8 July 2015

 

புலவனின்  தமிழும், அரசியல்வாதியின் பகுத்தறிவும்

 (வாட்சப் குழு உரையாடல் 1)

 


  Lagu:  ஜீவா..எங்க பாஸ் எனக்கு சொன்ன அறிவுரை: சம்பளம் வாங்க வந்தது நீ...குடுத்த சம்பளத்துக்கு வேலை வாங்க வேண்டியது முதலாளி வேலை. நீ எதுக்கு வந்தியோ அந்த வேலைய ஒழுங்கா செய்...அதாவது சம்பளம் வாங்குறது. மற்ற தேவையில்லாத டென்ஷன மனசுக்குள்ள வச்சிகிட்டா உன் ஆரோக்கியத்துக்கு தான் பிரச்சினை"

சொல்றது சொல்லிட்டேன். புரிஞ்சவன் பொழைச்சுக்கோங்க😂😂😂


 S:  குரூப்பை நாத்திகமா மாத்திட்டீங்க.

 

S: அபிராமி அந்தாதியின் விளக்கம் அச்சொல்லிலேயே நமக்குக் கிடைக்கின்றது.

 

                                  அந்தம்+ஆதி = அந்தாதி. அந்தாதிப் பாடல்களில் முதல் பாடலின் ஈற்றுச்சீர் மறு பாடலின் முதன்மை சீராக வரும். அப்படிப் பாடப் படும் பாடல்களில் இறுதிப் பாடலின் ஈற்றுச்சீர் முதல் பாடலின் முதற்சீராக அமைந்திருக்கும்.

 

                                  தமிழிலக்கியத்தில் அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி, கம்பன் எழுதிய சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, அருணகிரி நாதரின் கந்தரந்தாதி போன்றவை முக்கியமானவை. இவற்றுள் கம்பனின் சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் மேலே குறிப்பிட்ட நடையில் உள்ளன. ஆனால் அருணகிரியின் கந்தரந்தாதியோ வேறு நடையில் உள்ளது. ஒரு பாடலின் நான்கு அடிகளுக்கும் முதற்சீர் பொதுச்சீராக அமைந்துள்ளது. 


 உதாரணமாக:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
       துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

 

உதிக்கின்ற..மிதிக்கின்ற..துதிக்கின்ற, விதிக்கின்ற என்று ஒவ்வொரு வரியின் முதல் வார்த்தையின் இரண்டாம் எழுத்து ஒரே சந்தம் கொண்டு வரும்.

மேலும், முதல் பாடல் துணையே என்று முடிவதால், இரண்டாம் பாடல் துணை என்று ஆரம்பிக்கும்...

 

இரண்டாம் பாடல்

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்*
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் *
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

மூன்றாம் பாடல் அறிந்து என ஆரம்பிக்கும்..

 

 இது ஆன்மிகம் பரப்பும் நோக்கத்தில் அல்ல.... தமிழின் இனிமை ரசிக்கவே...

 

ஒரு பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பதிகிறேன். நீங்கள் உங்களால் முடிந்த அளவு..கூகுள் துணை கொண்டும் அதற்கு சொல்லுங்கள்... தமிழில் நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்ளலாம். வர்ணிக்கும் முறை அறியலாம்.pls try to crack it....


  பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர் முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்

திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே


 இப்பாடலில் பக்தி, காமம், அறிவியல், மானுடவியல் அனைத்தும் உண்டு...


  இதை மூன்று விதமாக பார்க்கலாம் லகு...


1. கதை அல்லது வரலாறு..
2. மானுடவியல்
3. அறிவியல்
இப்போது விளக்குகிறேன்..


                                   கதை அனைவரும் அறிந்ததுதான்..பாற்கடல் கடையும்போது முதலில் வஷம் வர அதை தேவர்கள் அரக்கர்களிடம் கொடுக்க அவர்களும் மறுக்க கடைசியில் சிவனிடம் கொடுக்க அவர் அறுந்த அந்நேரம் அதைக்கண்ட சக்தி கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்குள் செல்லாதவாறு தடுத்தால்...சிவன் நீலகண்டர் ஆனார்..


 மானுடவியல்:


எச்செயலிலும் முதலில் கெடுதல் தான் வரும். A leader should accept the failure as his own and to give credit of good to his people. The power (sakthi) inside the leader..ie Self confidence, awareness will help him to handle the failure...


 தமிழில் ஒரு பழமொழி உண்டு... ஆகாததை அடுத்தவனுக்கு கொடு..அவனும் மறுத்தால் ஆண்டவனுக்கு கொடு என்று...

 அறிவியல்:


The foreign bodies enter the body through nose and mouth will be retained by the tonsils which is in the throat (neck). During the time the immunity (எதிர்ப்புச் சக்தி) will get activated and fight against those...


  நீலகண்டன் என்ற வார்த்தைக்குப் பின் இத்தனை அர்த்தம் கொள்ளலாம்.


  முதல் வரி மட்டும் விளக்குகிறேன்... அது ஒரு சிலரை குதூகலமாக்கும்..


 பொருந்திய முப்புரை- மூன்று புரங்களுக்கு பொருத்தமானவள்... நான்கு புரம் என்பது வெளியே உள்ள திசைகள்.. மூன்று புரம் என்பது அக நிலைகள்..Conscious, Un conscious, and sub conscious mind. மூன்று புரமுமாக இருக்கிறாள் அம்பிகை..


  செப்புரை செய்யும் புணர் முலையால்-

 

                                      அம்பிகையே பழமையானவள்..உலகத்தின் அந்தம் அவள்..ஆனாலும் இன்று பிறக்கிற உயிரும் அவளால் என்பதால் இளமையோடு இருக்கிறாள் என்பதைச் சொல்ல எடுத்துக்கொள்ளப்பட்ட உருவகம் அது லகு...


                                      கடைந்தெடுத்த செப்பு போன்ற முலைகள் உடையவள்.. இளமையான பெண்ணிற்கு உண்டான உருவகம்... மார்பை மறைக்கும் வழக்கமே மிகத் தாமதமாகத்தான் மனித குலத்தில் தோன்றியது..


 ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

 

                                            சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலுருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அரசன் இது பற்றி அறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க முடியாத மாபெரும் தவறுகள் எனக்கொண்ட அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள்.



அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப் புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,

 

"மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே, கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு, இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்" எனும் பொருள்பட, பாட பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்.



இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர் பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.


 இதுதான் அப்பாடல்:
"நானேயினியுன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே"


Bi : கொஞ்சம் ஓவராத் தான் பாடிட்டார்...
 U : நேற்றைக்கு சுகு பகிர்ந்த ஒட்டக்கூத்தன் பாடலில் வரும் கபாடம் அர்த்தமும் கொடுத்திருப்பான்
... கதவு.  துவாரம்னாலும் அதே பொரூளைக் கொள்ளலாம்.  முதற்சங்கம் இருந்த இடம் கபாடபுரம. அதுவுமே கடல்லதான் முங்குச்சு.


                                      இந்தியா முழுக்க தமிழனின் பூமி.  கருமம் கண்டதையும் நம்பி இப்ப மாநிலமா சுருங்கி நிக்கான்.  அது எந்த மக்கள் தங்கள் முன்னோரைச் சாமீன்னாங்களோ அந்தச் சாமியின் பெயர்களாலேயே கேவலப்படுத்தப்படுவதை எப்படிச் சகிக்க?

  மாற்று முறைகளைக் கையில் எடுத்தோரெல்லாம் வரலாறு நெடுகிலும் தோத்திருக்காங்க இல்லேன்னாக்க உள்வாங்கப்பட்டு அவங்களும் சாமியாக்கப்படட்டிருக்காங்க


 மாற்று முறைகள் ஏதேனும் முன் வச்ச சித்தரோ வள்ளலாரோ சைவ சித்தாந்தமோ என்ன ஆச்சு


                                   சாதியை ஒழிக்க வர்ணாஸ்ரமத்தை மட்டுமே குறை சொன்னால் மட்டுமே எதுவும் நிகழாது.... ஒருவேளை பிராமணர்கள் அனைவரும் சாதியை விட்டுவிட்டாலும் நம்மவர் விட மாட்டார். சாதியை அப்புறப்படுத்த நம்மிடம் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும்.


                                  சாதிய அடிப்படையிலான ஒதுக்கீடு, தேர்தல்களில் சாதி ரீதியான வேட்பாளர் முறை போன்றவை இருக்கும் வரை சாதியை ஒழிக்கமுடியாது.
சாத்தியதியக்கூறான மாற்று முறைகளை அரசாங்கம் முதற்கொண்டு மத நிறுவனங்கள் வரை யாருமே முன்வைக்கலை சுகு



S
 : சாதி ஒழிப்பிற்கு உங்கள் செயல் திட்டம் என்ன?
U : வந்திருக்கும் மாற்றமும் இவர்கள் இருவரால்தானே தவிர வேறாராலும் இல்லை
சட்டத்திருத்தம் வரனூம்.  சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை கிரிமினல் குற்றமாக்கனும்
 ஆலயங்களில் அடுத்த வகுப்பாரையும் உள்ள விடனும்.  சாதிப்பெயர்களை ஓரங்கட்டிவிட்டு தொகுப்புப்பெயர்களை புரமோட் பண்ணனும்.



 S: மச்சி...ஒரு குரூப் இருக்கு... ஆன்மீக குரூப். எனக்கு, கணேஷ் குமார், லகுவிற்கு பொதுவான ஒரு நண்பர் (எங்களுக்கே இது இன்றுதான் தெரியும்).
[12:40, 02/07/2015] : படைப்பாளன் இல்லாமல் படைப்பு எப்படி வரும்னு கேட்குறாங்க? உலகத்தின் தோற்றம்..


நம்ம லகு அங்கேயும் நாத்திகவாதிதான்...



 
L: நாத்திகவாதி மாதிரி😝😝
U: நாத்திகவாதி இயற்கை விஞ்ஞானப் பார்வை கொண்டவனாக இருப்பான் லகு.
எதிலுமே ஒழுங்கைத் தேடும் மனதும் படைப்பாளனை உருவகித்துக்கொள்ள ஓர் காரணம்



 U: பயம், ஒழுங்கில்லா உலக இருக்கக் கூடாதெனும் எண்ணப் போக்கு இவைகளே ஆதியினில் மதமும் கடவுளும் உருவிகக் காரணிகளாக இருந்திருக்கலாம்.  உதாரணமாக பூமி அண்டப் பெருவெளியினில் ஆதாரம் ஏதுமின்றி தொங்கிக் கொண்டு சுற்றுகிறது என்பதை ஏற்காத மனமே ஹெர்குலிஸை உருவாக்கி இருக்கும். பின்னர் அதன் குறுக்கு வெட்டாக அதிகாரம் பாய்ந்து மக்களுக்காக அமைப்புகள் என்பது போய் அமைப்புகளுக்காக மக்கள் எனும் போக்கு வருகையினில் நாத்திகவாதம் தலை தூக்குகிறது. 


                                    எல்லாக் கேள்விக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என் ஆயுளுக்குள் என்பது நடவாத காரியம்.  நியூட்டனுக்கு அண்டச் சார்பியல்தத்துவம் தெரிந்திருக்காது. இங்கே கேள்விகள் தொக்கி நிற்கட்டும் விடையை பின் வரும் தலைமுறை கண்டு கொள்ளும் என விடுபவன் நாத்திகன்.  சாக்ரடீஸ் பீரங்கியை உருவகம் கூடச் செய்திருக்க இயலாது.  எல்லாவற்றுக்கும் கடவுளே விடை எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைப்பவன் ஆத்திகன்.  

 

                                தொக்கி நின்ற கேள்விகளே விளக்கி இருக்கிறது இன்று வரை.




No comments:

Post a Comment