Monday 27 July 2015

 

பயணங்கள் : பாலி ( Bali)

 பகுதி 1

 


                              என் கனவுப் பிரதேசங்களில் முக்கியமான சுற்றுலாத் தளம். சிறு வயதில் பாடப் புத்தகங்களில் சித்தார்த்தனின்(சமஸ்கிருதத்திற்கு எதிராகவும், உருவ  வழிபாட்டை தவிர்த்த கௌதம புத்தன் ) மொழி பாலி என்று பனி மூடமாக என் மனதில். அதே பெயரில் ஒரு தீவு பற்றி படித்த வயதில் புத்தனையும் பாலி மொழி பற்றி படித்ததும் மறந்தது என் தவறா?அல்லது எனக்கு அளிக்கப்பட்ட கல்வி முறையா? என்று தெரியாது. வழக்கம் போல் என் கோகைன் மூலமாகத் தான் ( என்னருமை டிஸ்கவரி சேனல் தான்) பாலியும் எனக்கு கனவுப் பிரதேசமாக மனதில் விதைத்தது. ரெண்டு வயதே நிரம்பிய என மகனிடம் "கொமோடோ எப்படி பா நடக்கும்?" என்றால் 20 முறை சளைக்காமல் நடந்து காட்டுவான். அப்போதெல்லாம் வாழ்நாளில்  என்றேனும் ஒரு நாள் நேரில் இந்தோனேசியாவை, பாலித் தீவை பார்த்து விடுவோமா ? என்று நினைத்த கனவு நடந்தே தீரும் என்று நினைக்கவே இல்லை.



                                 இந்தோனேசியா வந்ததிலிருந்து ஒரே முடிவில் உறுதியோடு இருந்தேன்...நல்ல கேமரா இல்லாமல் பாலி செல்வதில்லை என்று.  ஆசையே துன்பத்திற்குக் காரணம். என் ஆசைக்கு துன்பம் வலிமையாக அடி கொடுத்தது. நல்ல காமெராவும் இல்லை, திடீர் முடிவினால் பெரிதாக உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் திட்டமிடல் நடந்தது. ரம்ஜான் விடுமுறைக்கு நம் நாட்டுக்குப் போவதா? பாலித் தீவுக்குப் போவதா? என்ற குழப்பம்.  மனம்  பாலிக்கு செல்ல முடிவெடுக்க  வைத்தது.   மத்திய ஜாவாவிலிருந்து பாலிக்கு சாலை வழி 13 மணி நேரம் மற்றும் ஒரு மணி நேரக் கடல்  வழிப் பயணம். நான்கு  கார்கள். இரண்டு கார்கள் தலை நகர் ஜகர்தாவிலிருந்து, இரண்டு செமரங்கிலிருந்து இணைந்து கொள்வது என்று திட்டம். ...நிற்க 

                                    

                                செமரங் - எங்கள் ஊரில்   ஒரு சிவன் கோவில் உள்ளது என்று உடன் வேலை செய்யும் நண்பன்  சொன்னதால், ஒரு நாள் நானும் நண்பன் சம்பந்தமும் வழிபட சென்ற பொது தான் முதல் முறை  பாலி  இந்து  கோவிலைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமை முன் மாலை நேரத்தில்  யார் வருவார்கள் கோவிலுக்கு? இருவரும் உள்ளே சென்றோம்..நால்வரைத் தேடினோம் , நவக்கிரகங்களைத் தேடினோம், பிள்ளையாரைத் தேடினோம், சிவனைத் தேடினோம்....ஹ்ம்ம்..கண்ணில் பட்டால் தானே? ஒரு விக்ரகத்தையும் காணோம். சிவன் கோவில் என்று சொன்னானே? ஒன்றுமே இல்லையே? பாலி இந்துக் கோவில் மாதிரி கட்டிட அமைப்பு இருந்ததால் ஒரு வேலை இங்கு இந்துக்கள் மிக மிகக் குறைவு என்பதால் எதுவுமில்லை என்று நினைத்துக் கொண்டோம். கோவிலின் மத்தியில் ஒரு உயர்ந்த சிற்பம் ஒன்று இருந்ததைப் பார்த்து அதை வணங்கி விட்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டோம்.  சில நிமிடங்களில் ஒரு இளம் தம்பதியர் நெற்றியில் பச்சரிசி பொட்டோடு உள்ளே வந்தனர்.

 

 

                                கோவிலுக்கு வெளியே கை கால்கள் சுத்தம் செய்து கொண்டு உள்ளே வந்து நேராக ஊதுபத்தி இரண்டை எடுத்து பற்ற வைத்து அந்த நடுவிலிருக்கும் சிற்பத்தின் முன்னால்  போய் வஜ்ராசனத்தில் அமர்ந்தனர் இருவரும். ஒரு  முறை நெஞ்சுக்கு எதிரே கரம் குவித்து, பின்னர் தலைக்கு மேலே கரம் குவித்து தொழ ஆரம்பித்தனர். என்ன மந்திரங்கள் உச்சாடனம் செய்தனர் என்பது  எங்களுக்குத் தெரியவில்லை.  உதடுகள் மட்டும் முனுமுனுத்தவாறே இருந்தது. எந்த அசைவும் இல்லாமல் அவ்வப்போது கரங்கள் மட்டும் ரோபோவைப் போல் தலைக்கு மேல்  செல்வதும்,கரம் குவிப்பதும் என்று கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொழுகை நடந்தது. ஒரு வினாடி கூட கண்கள் திறக்கவில்லை.  ஒப்பிட்டுப் பார்த்தேன்.....நம்மவர்கள் பாதிப்பேர்  கும்பிடும் லட்சனம் தான் தெரியுமே..?நான் உட்பட.



                             

                                  அவர்கள் தொழுது விட்டு வந்ததும்...இங்கே சாமி விக்ரகமே இல்லையே? அந்த நடுவிலிருக்கும் சிற்பம் என்ன என்று கேட்டதற்கு அது தான் சிவலிங்கம் என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. பேசாமல் நம் நாட்டிலும் இதைப் போன்ற சிற்பம் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று ஒரு கணம் யோசித்தேன். லிங்கம் என்றாலே ஆன் பெண் உறுப்புக்களைத் தான் கும்பிடுகிறோமென்று பகுத்தறிவுப் பன்னாடைகளின் வக்கிரம் பிடித்தக் கண்களுக்கு(மூளைக்கு) இந்த சிற்பம் அந்த எண்ணத்தை மாற்றி விடுமென்று தான்.சென்ற வருடம் சக ஊழியன் ஒருவன் பாலியிலிருந்து மரத்தினாலான "அந்த" பொருளை பாட்டில் ஓப்பனர் பரிசாக கொடுத்து அதிர்ச்சி கொடுத்ததும் அதனால் சிறிய  களேபரம் அரங்கேறியதும் இன்னமும் மறக்கவில்லை. அந்த இளைஞனுக்கு  தேசிய மொழியும் சுமாராகவே தெரிந்ததால் எங்களுக்கு மேலும் விவரங்கள் கேட்டறிய முடியவில்லை........நிற்க

 
 
 
 

                                  கிட்டத்தட்ட 20மணி நேரப் பயணத்தை நினைத்தாலே பயமாயிருக்கும்(பயணத்தின் இடையிடையில் இளைப்பாறுதல், உணவருந்துதல், இன்னபிற சைத்தோபசாரங்கள்  சேர்த்து ). ஆனால் அத்தனை நேரமும் கடலோரக் சாலை வழிப் பயணமாக  இருந்தால்?!!!

 

                                                                                                                          தொடரும் .....

 



Sunday 12 July 2015

 
 

 தளம் - கட்டுமானத் தொழிலாளர்கள்

 (வாட்சப் குழு உரையாடல் )

 


Politician: அமைதியா இருக்குது . கூவப் போறேன்டே

 பத்த வச்சாத்தான் சரிப்படும் போல

Don: Match Box Venuma da

 Politician: லகுவுக்கு நான் கூவுனாலே போதும்

Don: Lagu vada

 Politician: ஆயிஷா நூலை நண்பர்கள் அனைவரும் படிக்கவும்.  இலவசமாக Download செஞ்சுக்கலாம்.  குழந்தைகளின் கேள்வி கேட்கும் மனப்பாங்கைக் கொன்றுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் நூல்.
 எல்லா பெற்றோருக்கும் தேவையான படிப்பினையைக் கொடுக்கும் நூல்

 இன்னும் சொல்லப் போனால் கேள்வி கேட்கத் தூண்டுங்கள்.  நாமும் படித்துக் கொள்ளலாம்

Pulavan: Good Morning Guys!!!  Please re send the link Uthaya.  I read the posts of Ilango P... Great. THanks for sharing these kind of posts..

 Politician: அப்ப மத்ததுக்கெல்லாம் திட்டுவியாடே மனசுக்குள்ள

Pulavan: மனசுக்குள்ள திட்டுற அளவுக்கு நீ worth இல்லடே.... சுமோ வருமோனு பயப்புடுற நிலைமையில் தான் நீயும்...... நானும்....


 Politician: Have tagged u in a related post Just go thru the discussions also


 Pulavan: Not yet. But I will read it for sure.  But these guys are amazing.... They discuss politics, society, ethics, science etc... Great..


 Police: Gm all.Nee irukum varai tamil valum machi kumkki


L: அரை வேக்காட்டு ப் பன்னாடைய...சுதாமா கதைய ஒழுங்கா படிக்க சொல்லுங்கப்பா

 
 
 
Arasiyalvaathi: குசேலனுக்கு 27 குழந்தைகளாம். எப்படியும் முதல் 7 குழந்தைகள் பெருசாகிருக்கும். அவங்க சம்பாதிச்சு காப்பாத்த மாட்டாங்களா?
 
L: பிறந்த 27 பெண் குழந்தைகள். இதுல 7 என்னத்த நொட்டுறது😁😁

சரி...விசயத்த சொல்றேன்...குசேலனுக்கு பிறந்த எல்லாமே பெண் குழந்தைகள் தாம். அதனால தான் ஏழ்மை. 27 நட்சத்திரங்கள் ஆனது இவர்கள் பெயர் தான்.

  குழந்தைகள் லிஸ்ட் குடுத்துட்டேனா?   27 பேரயும் சந்திரனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சானுக. அதுல சந்திரன் ரோகினி பின்னாடி மட்டும் தான் அலைவான். மத்தவங்கள கண்டுக்கிறதில்ல. அதனால எல்லாரும் போய் கம்ப்லெய்ண்ட் பண்ண அந்தப் பயல "ஒளி வீசுற. அக்ஷுகுல தானே திமிரா திரியிற? இருண்டு போன்னு சாபம் தந்துடறாங்க. அப்புறம் கையில் கால்ல விழுந்து சாபத்துல அமெண்ட்மண்ட் மட்டும் வாங்கி தினமும் ஒரு பொண்டாட்டி கூட அஜால் குஜால் பண்ணிக்கிறேன்னு சத்தியம் செஞ்சு நம்ம சுகு நட்சத்திரத்துல ஆரம்பிச்சு.....அஸ்வினி டூ மீனம் ஷட்டில் வாழ்க்கை.. சாபத்தினால..28 வது நாள் மட்டும் இருண்டு போவான்.அடுத்த 28வது நாள் முழு நிலவா ஒளி வீசுவான்.அமாவாசை மற்றும் பவுர்ணமி
தண்ணியாச்சும் குடுங்க டே😒

                               ரோகினி நட்சத்தித்தில பிறந்தவங்க முன் கோபி மற்றும் ரொம்ப ரொமாண்டிக்..புராண காலம்  கிருஷ்னன்...ரோகினி நட்சத்திரம. கருணா, இளையராஜா, கடைசியா.....

......நானும் தான்😜😜😜😜


 பார்ஷியல் பெராலிஸிஸ் விரல்களுக்கு மட்டும் என்னிக்கி வரப் போவுதோ😳😳

 L: அட்மின்..என்ன முழிக்கிற? நானே டைப் பண்ணினது..காப்பி பேஸ்ட் இல்ல. கை வலிக்காம என்ன பண்ணும்?😔
 

 Admin: எப்போது நம் எண்ணங்களை ஆட்டோமேடிக்கா எழுத்துருவாக்கம்  செய்றத கண்டுபிடிப்பாங்களோ?

 L: அது மாதிரி வந்துருச்சு ..விலை அதிகம்..ஆரம்பகட்டத்துல தானிருக்கு.  உடல் பாகங்கள் செயலிழந்தவங்களுக்கு இருக்கில்ல..stephen hawking அது மாதிரி எதோ ஒன்னு வச்சு தான் பேசுறாப்ல
 

மவனே..அதுக்கு ஒரு சர்வர் கண்டுபிடிச்சு நம்ம என்ன நினைச்சாலும் கையும் களவுமா பிடிச்சு மிதிப்பாங்கடியேய்..


 Pulavan: கவிதைகளுக்கான புதிய தளங்களை தவறு விட்டிவிட்டோம் என நினைக்கிறேன்.. எப்போதும் துதிபாடல், காதல், நிலா, நட்பு என்றே சுருண்டுவிட்டோமோ?


 இன்று காலை இவ்வெண்ணம் தோன்றியது...

  L: அப்படீங்கற? புதுசா முயற்சி செய்யலாம்.  பத்த வை..தளத்தை மாத்தலாம்
 எங்க சுத்திப் போனாலும் காமத்தில ஒரு கவிதை வந்தே தீரும்....

😛😛


Pulavan: Ok. I dont have much knowledge on english movies... எனக்கு வசனம் முக்கியம்... சில படங்களை வசனத்திற்காகவே பலமுறை பார்த்திருக்கிறேன்.. சமீபத்தில் வானம் என்ற படம். ஆங்கிலப் படங்களில் வசனம் எனக்கு விளங்காது என்பதால் தவிர்த்துவிடிகிறேன்..
  காமம் என்பது காதலின் செய்முறை தேடல்தானே லகு..😜😜


 L: கவுண்டர் டயலாக் "தியேட்டர்ல எல்லாரும் சிரிக்கிறப்ப நாம் சிரிக்கிறதில்ல? எல்லாரும் அழுவுறப்ப நாம் அழுவற்தில்ல?எல்லாரும் எந்திச்சு வெளிய போறப்ப நாமளும் போறதில்ல?"
என் இங்கிலிபிஷ் இம்புட்டு தான்..எனக்கே சொன்ன மாதிரி இருந்துச்சு..உழைப்பாளி படம் பாக்குறப்ப😄😄

Pulavan: கவிதைக்கான புதிய தளங்களை கண்டுபிடிக்க வேண்டும்... ஏதேனும் தோன்றினால் பகிருங்கள்..
  உதாரணமாக கோடுகள் பற்றிய கவிதைகள்.. (எனக்கு தோன்றியது இதுதான்)..


  அட்மின் ஏதோ சொல்ல வந்து தவிர்க்கிறான்... Why?????😟😟
 
L: ஒரு கேள்வி. மெர்சலாகாதீக

 Pulavan: கேளு.... எதுக்கும் ஒரு disclaimer போட்டுடு...எதுக்கு வம்பு..

 L: மாதவிடாய் 28நாள் தான்.  அமாவாசை, பவுர்ணமி யும் 28 நாட்கள் சுழற்சி தான்..எதுனா அறிவியல் லின்க்?????

 

  அப்ப..எதோ லின்க் இருக்குதா? பெண் தான் முதல் பிறவி..ஆணுக்கு பெரிய முக்கியத்துவ்ம் பரிணாம வளர்ச்சி க்கு அப்புறம் தானோ..??


 Po.Vee: Ella uyirukkum ithe sularchi unda lagu?   Summa irukkum pothu remba yosikkiriyo?

 L: வாய்யா போவீ..சும்மாயிருந்த சம்பளம் குடுக்க மாட்டானுவளே😭😭
குண்டக்க மண்டக்க யோசிக்கனும்ல? அதான்

Po.Vee: Athu yen manitha inaththukku mattum link?
 
L: எதிர்க்கேள்வி எல்லாம் கேக்க கூடாது. எப்பா..ஜெலட்டின் எங்க? இவன் தலைய உடம்புகிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி குடுக்கலாம்..ரொம்ப பேசுறான்

Pulavan: 😀😀 Lagu

 Pulavan: Good question lagu...I too had this question for a long time and found asnwer in astrology... ஒரு பெண்ணின் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பகுதிகளுக்கு நவகிரகங்களில்  சந்திரன் காரணமாகிறது . அதுமட்டுமின்றி பெண்ணின் உணர்ச்சிகளுக்கும், மனநிலைக்கும் சந்திரனே காரணம்...

  

சந்திரன் சரியாக ஒரு ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அது போலத்தான் நல்ல ஆரோக்கியம் கொண்ட பெண்களுக்கு 27 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு உண்டாகும். அது போல சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் சஞ்சாரம் செய்கிறது. எனவே பெண்ணின் மாதவிலக்கும் இரண்டே கால் நாட்கள் உண்டாகும்.

 
பத்த வச்சுட்டேண்டே!!!!!

 L: இதைப் படிச்சிருக்கென் சுகு..மறந்துட்டேன்..நன்றி நண்பா

Pulavan: பகுத்தறிவுகளுக்கு பத்திக்குமே லகு....

 L: பத்திக்கிச்சு. பிசினஸ் அனலிஸ்ட் வர்றாப்ல

‬  பிசினஸ் அனலிஸ்ட் : Appadiyea kaka porathukkum soossu porathukkum link irrukkanu sethu podunga.. mothamma vanthu vilakkam solluvar engal anithalaivar

 L: சுகு...எதுனா நல்ல மருந்து சொல்லு..  அடிக்கடி கக்கா பத்தி பேசுறாப்ல😄😄

L: பாபு..ஜெலட்டினுகு பயந்து குமரன் போர்வைய டைவர்ஸ் பண்ணிட்டான் போல

Pulavan: 😂😂 Lagu.... This seems to be uncontrollable.

 பிசினஸ் அனலிஸ்ட் ‬: Officla ori maathri paakuranga. Naan sirikiratha... next meet pannuren

Pulavan: Dont Disturb.... பகுத்தறிவாளர்கள் on work...

  Biju : Babu.. Give them your romantic look... All will be fine from then on...😜😜😝😝


Pulavan: ... I need some area that are rarely or not documented...


Politician: Bachelor mansion பற்றிய கவிதைகள்,  மொழி தெரியா  ஊர்களுக்கு புலம் பெயரூம் கூலிகள்


Bij: உண்டோ இதுவரை....?
பாடாத பாடல்
சொல்லாத கருத்து
தொடாத இடம்
புரியாத பொருள்
புனையப்படாத கவிதை
உண்டோ ...? (Don't know who wrote this...)


Pulavan: இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் லகு சொன்ன ஒப்பாரி பாடல் போன்ற தளம்... இதுவரை யாரும் தொடாதது... லகு நான் எழுதிய அந்த ஒப்பாரி பாடல் இருக்கிறதா உன்னிடம்?

 L: இவைகள் எல்லாமே மனச கரைக்கும் மெல்லிய துன்பம் முதல் பெருந்துன்பம் தரும் நிகழ்வுகள்.. எனக்கு ஒவ்வாது..😔😔😔
 Pulavan : Lets Try lagu...


 L: களம் விளக்கமாக சொன்னால் முய்ற்சிக்கிறேன். கவிதைய என் தங்கமணிக்கு அனுப்பிருக்கேன்.

Pulavan: ஒப்பாரி கவிதையையா அனுப்பினாய்?😟😳

 L: ஆமா..ஏன்?


 Pulavan: தப்பில்ல.. சும்மா கேட்டேன்.. அவங்களுக்கும் கவிதை பிடிக்குமோ?

L: அவங்க தான் ப்ரிவ்யூ .....பார்துட்டு சொல்றது..நெகடிவ் விமர்சனம் வரும்னு தெரிஞ்சா நேரடியா படத்த ரிலீஸ் பண்ணிக்குவேன்😜😜

L: பறவை வல்லூறுக்கு குஉத்த கமெண்ட்ல மெர்சலாகி..ellலாத்தையும் அழிச்சு எடிட் பண்ணி மறுபடி போஸ்ட் பண்ணிட்டேன்
 
Pulavan:          😱

L: 😁 அப்படித்தான். கமெண்ட்..ராவா 100% மெதனால் மாதிரி இருந்துச்சு

Pulavan: 😂😂 Methanol??? அதுனாலதான் கண்ணு போச்சோ? (Methanol cause Blindness)

L: 😁😁😄😄 மப்பும் இருக்கும்  சங்கும் ஊதும்.  அதுக்குத் தான் மெத்தனால உதாரணமாக சொன்னேன்


Politician: அரை மணி நேரம் மின்சாரம் இல்லாது போனாலே எரியுது உடம்பு.  இந்தக் கட்டுமானத் தொழிலாளிகள் வாழ்விடம பாத்திருக்கீங்களாடே்


L: பாலம் கட்டுறப்ப பாத்து நொந்திருக்கேன்😔😔


Politician: அச் சூட்டை ரணத்தை வார்த்தையில் வடி சுகு

 
 
Valluvan: நம்மை வெயில் மழையிலிருந்து பாதுகாக்க வெயில் மழையில் வேலை செய்யும் நண்பர்கள்

பிசினஸ் அனலிஸ்ட்‬: Avvlo kadummaya uzhaithu sambathitha kaasa kudichi azhikiratha pathiyum ezhuthu sugu

  Politician : I differ Babu

 ‬பிசினஸ் அனலிஸ்ட்: Udambu valiya marakka kudikkanu solrayaInstanta eppadippa ezhuthirenga..

Valluvan: பாபு சுகுவின் வார்த்தையை சொல்றேன். நம் மொழி நமக்கு வசப்படாதா


 சுட்ட மண் கொண்டு
சுட்டெரிக்கும் வெயிலில்
கட்டிடம் கட்டும் தொழிலாளி-அவன்
கட(ஷ்)்டத்தை பார்த்து
வாட்டத்தை போக்க திட்டங்கள் தீட்டுபவன் அறிவாளி..

இது பெட்டரோ

 கண்டிப்பாக எழுதுங்கள். நீங்கள் சென்ற வெளிநாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அன்பு கட்டளை


L: பகலெல்லாம் மேல் சுடுது
இரவெல்லாம்
கட்டாந்தரை சுடுது..
சீக்கிரம் தூங்கனும..
காலம்பற்
கழிவறைக்கும்
குளிர் சாதன வசதியோட
கட்டடம் கட்டனுமே!  எசமானுக்கு !
பொல்லாத விதியே

பொழுதோட தூங்க விடு என்னை!

 
 
Politician: மக்சீம் கார்க்கியின் தாய் நாவலைப் படிச்சிருக்கீங்களா

Valluvan: இல்லை உதயா

Politician: பாவெல்தான் கதைநாயகன்

: அவன் தந்தை தொழிற்சாலையில் கடின உழைப்பாளி.  கிடைக்கும் காசுக்குக் குடித்து விட்டே வருவான்.

ஏனெனில் அவனின் நிலைக்கான அரசியற் காரணம்புரீயாத காரணத்தால்.  சமூகம் சொல்லிக்கொடுத்த குடி வழியே சென்று சாவான்.  மகனும் அங்கனமே ஆரம்பிப்பான் வாழ்க்கைதனை.  அப்போதுதான் தொழிற்சங்கம் உருவாகும்.  தன் நிலைக்கான அரசியலைப் புரிந்து கொள்வான் அவர்கள் மூலம்

 குடி ஒழிப்பான்.  இங்கே இப்போது இந்த அரசியலை இலர்களுக்குச் சொலௌலிக் கொடுக்காததே குற்றம்


‬பிசினஸ் அனலிஸ்ட்: Kudi social problem.  Now made a political problem


 Politician: என்னளவில் நான் நாத்திகன் என்னளவில் நான் பொதுவுடைமைவாதி இவர்களே இது போன்றவைக்குக் காரணம்.


Valluvan: பட்டினியின்றி படுத்துறங்க

பகலெல்லாம் பாடுபட்டு
வந்த காசில் நோவுதீர

மது குடிக்க ஆரம்பித்தேன்-

குடித்தபின்பு பசிதீர்க்க காசுஇன்றி
பட்டினியாய் படுத்துவிட்டேன்.


கையில் காசுமில்லை

பானையில் சோறுமில்லை

படுத்தால் தூக்கமில்லை
பாழும் மனசுக்கது புரியவில்லை.



‬பிசினஸ் அனலிஸ்ட்‬: My view is it is more a problem of individual


 :Politician நான் சரியென உணர்ந்ததை வெளியில் பரப்ப வேண்டும்

L: 👏👏👏👏👏

 Politician: Ponna 👌👌👌 அன்றைக்குச் சொன்ன Marx ன் பஞ்ச் டயலாக் இதைத்தான் உணர்த்துது

பிசினஸ் அனலிஸ்ட்‬: Puriyalai udaya


 Politician: Class in itself and class for itself.  நான் யார் எனது வகுப்பெது ஏன் இங்கே இருக்கிறேன் எனப் புரிந்தோர் அது புரியாதோருக்கு வழி சொல்லிக் கொடுக்க வேண்டும்.


பிசினஸ் அனலிஸ்ட்‬: Appadi solla nall political atmosphere is not here.  Periyar vetti erinja thennamaram ellam ippo tasmaca ooruvedukka vatchitanga


Politician: அய்யாவே ஒரு முறை மது விலக்குக் கூடாதென்றார்.


பிசினஸ் அனலிஸ்ட்‬: I am not for prohibition


Valluvan: குடியை ஒழித்தே தீர வேண்டும்.


 பிசினஸ் அனலிஸ்ட்‬: But the rot that's happening has to be stemmed


  Biju :  கவிதைகள் சூப்பர்...

L: சோம பானம்.. எப்படி விடமுடியும்..😜😜


 Politician: சோமத்தையும் காமத்தையும் எப்படி விட்டொழிக்க ஏலும்

L: சோமமானம் இன்னுமிருக்கு😄😄  இந்தியாவில அழிஞ்சுருச்சான்னு தெரியாது.. சோமபானம் பாகிஸ்தானல இருக்கு. அது ஒரு செடியின் வேர். தேயிலை மாதிரி கொஞ்சம் வெந்நீர் ல குடிச்சா நல்லாயிருக்குமாம்



Pulavan: Busy with some discussions..


Politician: அப்போ நாங்க வெட்டி ங்கிறியா .....


Pulavan: I tried... But couldn't complete due to some discussions... I will post the half baked poem..


பிசினஸ் அனலிஸ்ட்‬: Athellam nee sollakoodathu


Pulavan S.: எட்டடுக்கு மாளிகை கட்டி விளக்கேத்தும் மகராசினு
என் ஆத்தா எந்நேரம் சொன்னாளோ
எட்டாத மாளிகைக்கே என் உழைப்பு போகுதம்மா!!
காத்தால தண்ணி ஊத்த கண்முழிச்சு பார்க்கையிலே
என் புள்ள பசிச்சு நின்னிருக்கும்
அடிமை வாழ்க்கையிலே நினைச்சப்ப சோறு எங்க
நாய்க்கு வச்ச சோறு மீந்திருக்க வேணும்னு
ஆத்தாவை கும்பிட்டு
அழுதிட்டு ஓடுறேனே?
எம்புட்டு வீடு கட்டி என்னத்த பண்ணுறது
என் புள்ள படுக்க எஞ்சாண் இடமிருக்கா?
கம்பி அறுத்து ரத்தம் வந்தால் மண் வச்சு அமுக்கிக்கணும்
கண்ணில் நீர் வந்தால் இமை வச்சு மறைச்சுக்கணும்
இப்படியோர் அடிமை வாழ்க்கை வாழ
எம்புள்ளைக்கும் எழுதியிருக்கோ
எம்புட்டு வீடு கட்டி என்னத்த பண்ணுறது
என் புள்ள படுக்க எஞ்சாண் இடமிருக்கா?