Friday, 10 March 2017

N=36 எனும் தப்புக் கணக்கு

 (சுகுமாறனின் முதல் காதல்)





SugumaranPACM: ஜீவா... என் கதைய நானே எழுதிடவா?



 என் கதை:
                            

                          எட்டாம் வகுப்பு வரை எனக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த நண்பன் LHS=RHS என்று பிஸியாகிவிட்டதால்..... நான் கணித டியூசன் செல்வதாய் முடிவானது. 


                           அங்கே இருந்த முருகன் மற்றும் ஜெய்சேம் என்ற இரண்டு ஆசிரியர்கள் (அப்பொழுது தான் பி எஸ் ஸி முடித்திருந்தனர்) எனக்கு குருவாக மட்டுமில்லாது நண்பர்கள் ஆகவும் ஆகினர்.  கணித ஆசிரியர்கள் மட்டுமே நட்பாகினர்.. கணிதம் இல்லை. என் கணிதத் தேர்வின் போது என்னை வில் அவர்களே மிகவு டென்சன் ஆவார்கள்.

                              ஒண்பதாங்கிளாஸ் வகுப்பில் நான் மட்டுமே மாணவன்.. மற்ற மூவர் மாணவிகள். அதனால தேரிவின் போது வகுப்பில் தடுப்பிற்கு இந்தப் பக்கம் எனக்கு தேர்வு நடக்கும் அந்தப் பக்கம் மாணவிகளுக்கு. அப்படி நடந்த முதல் தேர்வில் நான் வழக்கம் போல பெயில். மார்க் சீட் கொடுக்கும்போது ஒரு பெண் என் மார்க்கை பார்த்து சிரிக்க மற்றொரு பெண் இதில் சிரிக்க என்ன இருக்கு... அவன் நல்லா கவிதை எழுதுவானாம். உன்னால முடியுமா என்றால்... எனக்கும் என் கவிதைக்கும் ஒரே வரியில் கிடைத்த முதல் அங்கிகாரம் அது. கரிசனப்பட்டு வந்த குரலை தரிசினப்படக் காத்திருந்தேன்.

                               அதன் பின்னர் நடந்த தேர்வில், தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கு(ம்) பதில் தெரியவில்லை. முயற்சித்து பார்க்கலாம் என்று ஒரு துண்டு பேப்பரில் 3. கேள்விக்கான பதில்? என்று எழுதி மறைவு சுவற்றின் கீழ் இருந்த இடுக்கின் வழியாக அனுப்பினேன். 

தப்பு பண்ணிட்டமோனு பதைபதைத்து காத்திருந்தேன். 
தேர்வை தொடர்ந்து எழுத முடியல. யாரும் அசிங்கப்படுத்தும் முன் பேப்பரை கொடுத்துட்டு கிளம்பிடலாம்னு எத்தனித்தேன். 
பேப்பர் மீண்டும் வந்தது.

 பிரித்தேன். 

      n=36


என் வாழ்வில் என்னிடம் நேரடியாக ஒரு  இளம் பெண் பேசிய வார்த்தை...n=36.


பல நாட்கள்... என் நினைவில் நின்ற கவிதையும் n=36.

 இப்படி சில நேரம் என் இதயம் பறக்கும் எண் பதில் கிடைக்கும். ஒரு நாள் தைரியமாக நீண்ட நாள் வினாவை தொடுத்தேன்.... 


பெயர்?????




பிரசவத்தின் வலி தெரியுமா?


அன்றுதான் உணர்ந்தேன். 


இதயம் துடித்து இடம் மாறி இருப்பதை உணர்ந்தேன்.


சரியா 36 வினாடிகள்...


பதில் வந்தது 


N. V.n=36N. Vஇருவரி ஹைக்கூ...இருவரின் ஹைக்கூ...


                                      காதலின் தொடக்கமது. எனக்கும் காதல் வந்தது. எனக்கே நம்ப முடியவில்லை.


இதயம் தன்னை இடம் மாறி இன்னொரு இதயத்திற்கு இடம் விட்டு நிறபதாய் சொன்னது. என் வீட்டு நிலைக் கண்ணாடி நல்லதோர் முகம் காட்டி "நம்பு... நீதான்" என்றது.


 நம்பினேன்.. நம்பிவிட்டேன்.


 இப்படியே போன சில நாட்களில் அந்த தேவதை முகம் பார்த்தேன். பேசினோம்.. சில வார்த்தைகள்.. பல பார்வைகள். 


n=36 கதை மட்டும் தொடர்ந்தது. என் கேள்விக்கான பதில்கள் அவளிடம் இருந்தே கிடைத்தது..ஏனெனில் கேள்வி இதுவருக்குமானது.வாழ்வும் இருவருக்கமாக மாற்றும் முயற்சியில் இருதேன்.


 பத்தாம் வகுப்பு ஆரம்பித்தது....



 இப்போது மற்ற இரண்டு பெண்களும் வகுப்பிற்கு வருவதில்லை. நாங்கள் இருவர் மட்டுமே.. ஆகையால் ஒரே வகுப்பானது. நாம் இருவர்... மகிழ்ச்சி.....


அப்போதுதான் இருவரும் பேச ஆரம்பித்தோம்.....


"ஏய்... மேத்ஸ் ஈசி தெரியுமா?" அவள்.


"எனக்கு இல்லை... எனக்கு தமிழ்தான் ஈசி".. நான்


"கேள்விப்பட்டேன்... நீ நல்லா கவிதை எழுதுவீனு"


"ஆமாம்"


"தமிழ் படிச்சு என்ன செய்வ... மேத்ஸ் படிச்சாதான் இஞ்சிபியர் ஆகமுடியும்"


"எனக்கு.. மேத்ஸ் வரல."


"ஏன்?"


"எனக்கு எங்க மேத்ஸ் வாத்தியாரை (TP) ய பிடிக்காது"


"உனக்கு நான் சொல்லித்தாரேன்"


"நீ சொல்லித்தந்தாலும் வராது"


"ஏன்? என்னையும் உனக்கு பிடிக்காதா?"


சட்டென்று பதிலை தொலைத்து நின்றேன்.


என்ன சொல்வது... பிடிக்கும்னு எப்படி சொல்ல? பிடிக்கும்னு சொல்லவா..


பதில் கிடைத்தது... பண்பாடு தடுத்தது.


பரவாயில்ல.. நான் உனக்கு சொல்லித்தாரேன் என்றாள். அவள் பாடம் சொல்லித்தந்தாள். ஆசிரியர் தேர்வு வைப்பார். முடிந்ததும் பேப்பரை கொடுத்துவிட்டு நான் கீழே சைக்கிளை எடுக்க நிற்பேன். அவள் வருவாள்.. ஒரு பேப்பர் கொடுப்பாள். அதில் விடைகள் இருக்கும். வழக்கம் போல...


கேள்வி-1= n=36கேள்வி-2= y=3.5.............இப்படி.."வீட்டுல போய் ஆன்ஸர் செக் பண்ணிப்பாரு... தப்பா எழுதுனத சரியா எழுதிட்டு வந்து திங்கள் கிழமை வந்து காமி".


கிரிக்கெட் விளையாடப் போகாத... இதுதான் லைப் "..


நமக்கு?


உனக்குநு சொல்லலைல..


நமக்கு... நாம்.


நீ என்று சொல் உதடுகள் கூட ஒட்டாது..


நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்..


உதடுகள் ஒட்டுமா?????😍😍

 இப்படி போனது வாழ்க்கை. 


கணிதம் புனிதமானது.


புதிர்கள் விடுபடலானது.


எண்கள் என் கள்ளானது.


கணித போதை காதல் போதை இரண்டும் ஆட்டுவித்த காலம் அது.


பத்தாங்கிளாஸ் தேர்வு வந்தது.. 


தேர்வுக்கு முந்தைய நாள்.. All the best சொன்னாள். பரீட்சை எழுதி முடித்ததும் டியூசனுக்கு வா என்றாள்.தேர்வு முடிந்தது. சென்றேன்.. அவள் வரவில்லை.மற்ற தேர்வுகள்..முடிந்ததும் விடுமுறை.மதுரை பயணம்.

10த் ரிசல்ட் வந்தது.மார்க் சீட் வாங்கியதும் முதலில் பார்த்தது கணித மார்க்..


 100க்கு 100. 


மகிழ்ச்சி...


என் தேவதைக்கு நான் வழங்கும் பரிசு இது.


இந்த மகிழ்ச்சியை சொல்லும் அதே நேரம் காதலையும் சொல்லி விட முடிவெடுத்தேன்.எங்கே சந்திக்க??


அவள் பள்ளிக்கூடம் விரைந்தேன். வாசலில் நின்றேன். காத்திருந்தேன். வரவில்லை.


ஆகா... டியூசனில் எனக்காக காத்திருப்பாள். ஓடினேன். 


ஆசிரியர் இருந்தார். என்னப்பா எவ்ளோ மார்க்.. 


மார்க் சீட்டை கொடுத்து விட்டு கண்கள் அவளை தேடியது.சூப்பர்ப்பா... நாங்க சொல்லிக் கொடுத்தது வீண் போகல..


யாருக்கு யார் சொல்லிக் கொடுத்தா? 


அவருக்கான அவரின் பாராட்டுகள். சொல்கிட்டு போகட்டும். 


சார்... விஜி வந்தாளா?


இல்லப்பா..அவங்க அப்பாவுக்கு transfer ஆகிடுச்சாம். பரீட்சை முடிந்த மறு நாளே அவள் மதுரை கிளம்பிட்டா...


இடி விழுந்தது. அப்ப இந்த நூற்றுக்கு நூறு.. என் காதல்...அய்யோ..



"சுகுமார் மறந்துட்டேன்.. உன்கிட்ட கொடுக்க சொல்லி ஒரு பேப்பர் கொடுத்திட்டு போனாள்."


ஆகா... மகிழ்ச்சி..


ஆனால் வெளிக்காட்டவில்லை. "சர் சார் வீட்ல போய் பார்க்கிறேன். அம்மா வெயிட் பண்ணுவாங்க".


" சரிப்பா.. +1க்கு இங்கேயே வந்திடு.. +2 செண்டம் எடுத்தால் இஞ்சினியர் ஆகிடலாம்"


ம்ஹூம்.. அங்க தர்மர் என்னை டாக்டர் ஆக்கனும்னு வெறி பிடிச்சு தெரிஞ்சுட்டு இருக்கார்... நீங்க இஞ்சினியர் ஆக்கணும்னு வெறி பிடிச்சு அழைறீங்க...


வீட்டுக்கு வந்தேன். எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள். எதுவும் கேட்க வில்லை. 

பரபரவென மாடிக்கு ஓடினேன். 


சீல் செய்யப்பட்ட கவர். 


சுகுமாருக்கு என்று எழுதியிருந்தது..


ஆகா... எனக்கும் காதல் கடிதம். நம்ப முடியல. அட்ரஸ் கொடுத்திருப்பா.. படிச்சதும் பதில் எழுதணும். மதுரையில் தான் கல்லூரிக்கு போகணும். அப்பத்தான அவளை பார்க்கமுடியும்.


ஒரு கவரை பிரிப்பதற்குள் மனம் கல்லூரி முதல் கல்யாணம் வரை விழுந்துவிட்டது.படபடவென பிரித்தேன்.


உள்ளே ஒரு தாள்...


அவளின் மணம்..


அவளின் மூச்சை உணர்ந்தேன்.அவளின் இதயம் அங்கே துடிப்பது எனக்கு கேட்டது... எனக்கு மட்டுமே கேட்டது.பிரித்து விட்டேன்.அதில். இப்படி ஆரம்பித்திருந்தாள்...

[16:26, 13/06/2016] SugumaranPACM: முடிவ எல்லோரும் இருக்கும்போது சொல்றேன்.













அதில் இப்படி ஆரம்பித்திருந்தாள்...



கேள்வி-1= n=36கேள்வி-2= x=3.5

All the best to score 100. 

You are my first student.








பயபுள்ள நம்மள மக்கு ஸ்டூடண்டால நினைச்சு பழகிட்டு இருந்திருக்கு..இப்படி முடிந்தது என் முதல் காதல்.போதுமாய்யா..


[16:04, 13/06/2016 to 16:26, 13/06/2016 Chat story typed by Sugumaran in Whatsapp.

No comments:

Post a Comment